மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கிறதாம் மின்சாரசபை!

editor 2

மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர் மின்னுற்பத்தியில் சாதகமான நிலை காணப்படுகிறது.

ஆகவே, அதன் பயனை மின் பாவனையாளர்களுக்கு வழங்குவோம் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திகபத்திரகே தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்ஷதில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மின்னுற்பத்திக்கான செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காகவே கடந்த ஆண்டு இரண்டு முறை மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எதிர் வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் மின்னுற்பத்தி தொடர்பான செலவுகள் குறித்த விவரங்களை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைப்போம் – என்றார்.

Share This Article