இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியமர்த்தப்படவேண்டும் – என்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்கிர மசிங்க வடக்கு மாகாணத்துக்கு வருகைதந்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப் பாணம் வந்த அவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக குழு விசேட கூட்டத்தில் பங்கேற்றார்.
இதன்போதே மேற் குறித்த உத்தரவை பிறப்பித்தார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இடம் பெயர்ந் தவர்களை மீள் குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்னை தொடர முடியாது.
அவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இதற்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.