வடக்கில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி பதிவாகும் அதே
நேரம், கிழக்கு மாகாணத்தில் மிகக்கனமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.பிரதீபராஜா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வலுவான கீழைக் காற்றின் வருகை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் எதிர்வரும் 9ஆம் திகதி காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகக்கும்
மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொடரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிராமங்கள் பலவற்றுடனான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது