கொரோனாப் பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையில் புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.