தொடருந்தில் பயணச்சீட்டின்றிப் பயணிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

editor 2

தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிப்பதாகவும் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதத் தொகையினை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாய் வருமானம் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை 10,000 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார தெரிவித்துள்ளார்.

Share This Article