நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதி செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத்தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 25 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன.
இன்று அந்த மாகாணங்களில் ஒரு குடும்பம்கூட இல்லை.
52 வீதமான தமிழ் மக்களே வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் பெரும தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமைகளை இழந்துள்ளனர்.
அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப் பாடசாலைகள் இல்லை. இது ஒரு துரதிர்ஷ்டமான நிலை. இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள – பௌத்த மக்கள் ஒன்றிணையவேண்டும் – என்றார்.