பாதுகாப்பு இன்றி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கஜேந்திரகுமார் அழைத்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் டக்ளஸ்!

editor 2

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு இன்றி பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளமை தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்துக்கு நீதி கோரி சர்வதேசத்தை நாடினால் நாடாமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் சூனியமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆறு ஜனாதிபதிகளை சந்தித்தவன் நான். அந்த ஆறு ஜனாதிபதிகளுடனும் ஏதோவொரு வகையில் உறவுகளை பேணியவன். அவர்களுடன் இணைந்ததாகத்தான் எனது அரசியல் பயணம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தியே எனது அரசியல் பயணம் அன்று தொடக்கம் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – என்றும் தெரிவித்திருந்தார்.

Share This Article