முல்லைத்தீவின் சில கிராமங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருவதாக மாவட்ட அனர்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவின் வண்ணாங்குளம், செல்வபுரம் மற்றும் கள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் சுனாமி தொடர்பிலான வதந்தி பரவி வருகிறது.
சுனாமி தொடர்பில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனவே மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அதேவேளை,
மக்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் 117 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு சந்தேகத்தினைத் தீர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.