யாழ்.பல்கலை மாணவி மரணத்தில் சந்தேகம்; குடும்பத்தார் முறைப்பாடு!

editor 2

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார்.

குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் மரணித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

Share This Article