கொவிட் – 19 ‘JN-1’ உப திரிபினால் இலங்கைக்கு பாதிப்புகள் மிகக்குறைவு – சுகாதார அமைச்சு!

editor 2

கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி அந்த நிறுவனம் ஏற்கனவே பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,இன்ஃப்ளூவன்ஸா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவலை முகமூடி அணிதல், சமூக இடைவெளியை பேனுதல் போன்றவற்றின் மூலம் குறைக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share This Article