யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – குடத்தனையை சேர்ந்த முதியவர் ஒருவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், அவரின் உடல்கூற்று பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடத்தனை – பொற்பதியை சேர்ந்த சின்னத்தம்பி குருசாமி (வயது 73) என்பவர் நேற்று முன்தினம்
ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மரணமானார்.
அவரின் மரணம் தொடர்பாக கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையை சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார்.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் குடல் வெடிப்பு ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்பட்டதால்
உயிரிழந்தார் என்று அறிக்கையிட்டார்.
இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப் படையில் மரண விசாரணை அதிகாரி மருத்துவ அறிக்கையை பருத்தித்துறை நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக
பாரப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.