நத்தார் பண்டிகையை ஒட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பெண் கைதிகள் இருவர்
உட்பட கைதிகள் 45 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்
விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற
கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து
கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த, தண்டனை பணம் செலுத்தாத கைதிகளே நேற்றைய தினம் விடு
தலை செய்யப்பட்டுள்ளனர்.