ஆழிப்பேரலை; நாளை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!

editor 2

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாட்டில் நாளைய தினம், அனைத்து மக்களும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Share This Article