கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு பொது மன்னிப்பு!

editor 2

நத்தார் பண்டிகையை ஒட்டி கைதிகள் ஆயிரத்து நான்கு பேருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குறித்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆண் கைதிகள் 989 பேரும், பெண் கைதிகள் 15 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் கூறினார்.

நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர் மேலும், 

நாளை (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொதுமன்னிப்புக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Share This Article