நீண்டநாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி போதனா வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
கம்பொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், இந்த மரணம் தொடர்பில் கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த நபர் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
இறப்புக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதாகவும் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும் வைத்தியர்களின் கருத்திற்கமைய இது கொரோனா மரணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.