ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில் வழங்கியுள்ளார் என்று தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இரகசிய சந்திப்பொன்று இருவருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இரவு விருந்துடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகத்தின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோரைத் தவிர வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.
எதிர்காலத்தில் எவ்வாறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரவு விருந்திற்கு மறுநாள் திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மகிந்த, வெளியிட்ட அறிவிப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டிருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்கின்றனர் அவதானிகள்.