யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்த விசேட போதை ஒழிப்பு நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடுதழுவியதாக விசேட போதைப் பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பருத்தித்துறை பொலிஸ் பிரிவி லும் கடந்த 17ஆம் திகதி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக் கப்படுகின்றது.
இதில், ஹெரோ யின் போதைப் பொரு ளுடன் 16 பேரும், கசிப்புடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் இருவரும், போதை மாத்திரைகளுடன் இருவர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.