யாழ்ப்பாணம் – துன்னாலையில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
43 வயதான குறித்த பெண் நெல்லியடி காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 678,900 ரூபாய் பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.