மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஜனவரி கையளிப்பு!

editor 2

வரவு – செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் 11,250 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.

03 ஆண்டுகளின் பின்னர் இந்த நிதி ஒதுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article