தமிழ்க்கட்சிகளுடனான சந்திப்புக்கு த.தே.ம.முன்னணிக்கு அழைப்பில்லை!

editor 2

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்புக்கான எவ்வித அழைப்பு தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எனும் ஜனாதிபதியின் கொள்கையை கைவிட்டால் மாத்திரமே, தமது கட்சி அரசியல் தீர்வு தொடர்பான ஜனாதிபதியின் கலந்துரையாடலில் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article