வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார்.
இவர் 1974-08-14இல் சாவகச்சேரியில் பிறந்து, மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலத்தில் கல்வி கற்று 1996இல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு தேர்வாகி, 2000ஆம் ஆண்டு புவியியல் சிறப்பு பட்டம் பெற்றார். 1998முதல் 2003 செப்ரெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.கா. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
2004- ஓக்டோபர் முதல் 2015 ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றினார்.
2015 ஜூன் முதல் 2019 செப்ரெம்பர் வரையில் மருதங் கேணிப் பிரதேச செயலாளராகவும், 2019 ஒக்டோபர் முதல் 2019 டிசம்பர் வரையில் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபராகவும் பணியாற்றினார்.
2019 டிசம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச
அதிபராக பணியாற்றிய சமயம் நிர்வாக சேவை விசேட தரத்திற்குத் தேர்வாகி 2022 நவம்பர் 22 முதல் தற்போது வரையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக பணியாற்றுகின்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராகப் பதவியேற்கும் வகை யில் இன்று வியாழக்கிழமை அவருக்கு நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.