2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் இதேவேளையில், எதிர்வரும் 2024 ஆண்டு 03 வீதம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
”நெருக்கடியிலிருந்து வெளியே வந்து சரியான பாதையில் இலங்கை செல்கிறது. இது அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். எவ்வாறாயினும், இஸ்ரேல் காசா போர் காரணமாக சில பாதிப்புகள் ஏற்படலாம். இதன் விளைவாக, எண்ணெய் விலைகள் அதிகரிக்க கூடும். எண்ணெய் விலைகளே அடுத்த ஆண்டு பாரிய சவாலாக இருக்கும்.
உலகளாவிய வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கான சில அறிகுறிகள் உச்சத்தில் இருப்பதையும் நாங்கள் காண்கிறோம். என்றாலும் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் தளர்வு இருக்கும். அன்னியச் செலாவணி வருவாய் பொருளாதாரத்துக்கு பலமானதாக இருக்கும்.’ எனவும் வெளிநாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி 1.8 வீதம் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்
என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது