கொக்குவிலில் மாணவர்களை இலக்குவைத்து போதைப் பொருள் விநியோகம் – ஆறு பேர் சிக்கினர்!

editor 2

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘வட்ஸ் அப்’ செயலி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி இவ்வாறு விற்பனை செய்து வந்த 06 சந்தேகநபர்கள் நேற்று மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவரை மூன்று நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றக் கட்டளை பெறப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப் பொருள் பாவனையில் சந்தேக நபர்களை விசாரணை செய்து பெறப்படவுள்ளன.

Share This Article