உயர்தரப்பரீட்சை; பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!

editor 2

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்த முடியாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,

எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 திகதி வரையில் நாடளாவிய ரீதியிள்ள 2 ஆயிரத்து 298 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரையில் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது,

Share This Article