முல்லைத்தீவு – பரந்தன் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்வதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே வெள்ள நீர் குறுக்கறுத்துப் பாய்வதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனால் அந்த வீதியை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவோம் மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.