வவுனியா மாவட்டம் கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்து தானாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றமை தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் தரைக்கீழ் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது.
இந்த நிலையில், வவுனியா, கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்து தானாக தண்ணீர் குழாய் நீர் குழாய் ஊடாக பாய்ந்து வருகின்றது.
இரண்டு நிலக்கீழ் நீரோட்டங்கள் நேர் எதிர்திசையில் சந்திக்கும் இடத்திலோ அல்லது அதிக நீர் தேங்கி வெளியேறக்கூடிய அழுத்தம் ஏற்படும் சந்தர்ப்பத்திலோ கிடைக்கும் இடைவெளி ஊடாக நீர் மேல் நோக்கித் தள்ளும் செயற்பாட்டினை ஆட்டீசியன் கிணறு என்று புவியலாளர்கள் குறிப்பிடுவர்.
அதன் அடிப்படையிலேயே குறித்த நீர் வெளியேற்றம் நிகழ்வதாக கருதப்படுகிறது.