அரகலய என்ற போர்வையில் இடம்பெற்ற அநீதிகளை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம், மீண்டும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை.
இதேவேளை,
எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.