மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை, மயிலத்தமடு பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிராக போராடிவரும் பூர்வீக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாகனத்தில் பயணித்தபோது அங்கு சென்றவர்களை, அம்பிட்டிய தேரர் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்கள் வழிமறித்து தடுத்துள்ளனர்.
தமிழ் – சிங்கள மக்களின் இன நல்லுறவை சீர்கெடுக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருந்து வருகை தந்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்து, கூச்சலிட்டு, தகாத வார்த்தைகளை பிரயோகித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எதிர்ப்பாளர்களுக்கு பொலிஸாரும் ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.