மத வெறுப்பு பேச்சு – முறையிட இலக்கங்களை அறிவித்தது பொலிஸ்!

editor 2

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மத வெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை பொதுமக்கள் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை இலங்கைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்ற குற்றங்களை பொதுமக்கள் 0112300637 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமும்,  0112381045 என்ற தொலைநகல் ஊடாகவும் ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்க முடியும்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மதவெறுப்புப் பேச்சு தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான பிரிவை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article