மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்!

editor 2

சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் முன்னிலையில் அவர் மீண்டும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்துரைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article