2022 ஆம் ஆண்டில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காலி கோட்டைப் பகுதியில் சட்டத்தரணிகள் சிலர் எதிர்ப்பில் ஈடுபடத்தயாரானபோது, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், பொலிஸாரும், இராணுவத்தினரும் உயர் நீதிமன்றில்
மன்னிப்பு கோரியுள்ளனர்.
11 சட்டத்தரணிகள் இணைந்து முன்வைத்த மனு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயர் நீதிமன்றில் முன்னிலையான காவல்துறையினரும், இராணுவத்தினரும் சட்டத்தரணிகளிடம், தமது தவறுக்காக வருந்துவதாக தெரிவித்ததுடன், அதற்காக மன்னிப்
பும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் இடம்பெற்ற காலத்தில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்
பெற்றிருந்தது.
இதன்போது, கடந்த அரசாங்கத்திற்கு எதிராக, சட்டத்தரணிகள் காலி கோட்டை பகுதியில்
எதிர்ப்பு பதாகைகளை காட்சிப்படுத்த முற்பட்டனர்.
இதற்கு, பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இடையூறு ஏற்படுத்தியதாக
குற்றஞ்சாட்டி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.