கிளைமோர் வெடிகுண்டு கவர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் முதியவர் கைது!

editor 2

கிளைமோர் வெடி குண்டு செய்யப்பயன்படுத்தும் வெற்றுக் கவர்களை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளைமோர் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் வெற்றுக் கவர்கள் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டு, இவற்றை உடமையில் வைத்திருந்த
ஓர் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கிளிநொச்சி நாச்சிக் குடாவைச் சேர்ந்த தம்பி குணசேகரன் என்னும் 63 வயது முதியவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாச்சிக்குடாவில் உள்ள ஓர் வீட்டில் இருந்து கிளைமோர் தயாரிக்கும் 10 இற்கும் மேற்பட்ட கிளைமோருக்கான வெளிக்கவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டவை புதிய கவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரைச் சான்றுப் பொருளுடன் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Share This Article