ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி மின்சார கட்டண திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது எனவும், குறித்த சட்டமூலம் ஜனவரி மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார துறையை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு அமைய, 54 வருடங்கள் பழமையான இலங்கை மின்சார சபை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபை 10 பிரதான நிறுவனங்களின் கீழ் பிரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.