வெளிநாட்டிலிருந்து கிளிநொச்சி வந்திருந்த பெண் ஒருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளும் திருடப்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் 29.11.2023 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பிரதான சந்தேக நபர் அவரது மனைவி உள்ளிட்ட மூவரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்த திருடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் ஐபோன் ஒன்றும், 198,000.00 பணம் மற்றும் ஹெரோயின் 430 மில்லி கிராம், வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், உதயநகர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.