இலங்கைக்கு 15 கோடி டொலர் (சுமார் 4,905 கோடி ரூபாய்) கடனுதவி வழங்குவதற்கு உலக
வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இந்த தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நாட்டின் வைப்புத் தொகை காப்புறுதித் திட்டம், மறுமூலதன மாக்கல், மத்திய வங்கியின் திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் திட்டத்தை நடை முறைப்படுத்துதல் ஆகியவற்றின்
கீழ் இந்தக் கடன் தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, உரிய தீர்மானத்தை எட்டுவதற்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோச
னைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மேலும் கருத்துரைத்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,
‘கடன் மறுசீரமைப்பின்போது அனைத்து வைப்பாளர்களின் வைப்பு தொகையில் ஒரு பகுதியை அரசாங்கம் மீட்டெடுக்கும் எனும் சித்தாந்தத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
அனைத்து மக்களின் வைப்புத் தொகைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம்
உழைத்தது.
எதிர்காலத்தில் அதை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு, வைப்பு தொகைகள் அனைத்தையும் காப்பீடு செய்து ஒரு பெரிய தொகையை மூலதனமாக்குவதற்கு உலக
வங்கியிடமிருந்து 15 கோடி அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது’ – என்றார்.