வங்கக்கடலில் உருவாகும் “மிக்ஜாம்” புயல் – தமிழகம், இலங்கைக்கு பாதிப்பு!

editor 2

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுதினம் முதலாம் திகதி புயலாக வலுப்பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புயலானது டிசம்பர் 5ஆம் திகதி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு மிக்ஜாம் (MIKJAM ) என்று மியான்மர் பெயரிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் மூன்று புயல்கள் உருவாகியுள்ளன.

முதலில் உருவான தேஜ் புயல் ஓமனிலும் இரண்டாவதாக உருவான ஹாமூன் புயல் மற்றும் மூன்றாவதாக உருவாக மிதிலி புயல் என்பன வங்கதேசத்திலும் கரையை கடந்தன.

இந்த நிலையில் நான்காவதாக உருவாகவுள்ள புயல் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தவுள்ளது. குறிப்பாக புயல் தாக்கம் இல்லாதுவிட்டாலும் மழை நிலைமை தாக்கம் செலுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

Share This Article