புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பதவிப்பிரமாணம்!

editor 2

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Article