போலி வீசாக்கள் மூலம் வெளிநாடு செல்லமுற்பட்ட இருவர் விமான நிலையத்தில் கைது!

editor 2

போலி வீசாக்களை பயன்படுத்தி ஒஸ்திரியா செல்ல முயன்ற கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 25, 27 வயது இளைஞர்கள் என்று தெரிய வருகின்றது. இவர்கள் துருக்கிய எயார்லைன்ஸ் விமானம் 11ஃ731 இல் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் செல்வதற்காக நேற்று காலை 07.30 மணியளவில் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

துருக்கி எயார்லைன்ஸ் அதிகாரிகளிடம் தமது விமான அனு மதியை மேற்கொள்வதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில் ஒஸ்திரிய வீசாக்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லை ஆய்வு பிரிவின் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வீசாக்கள் போலியானவை என தெரியவந்தது. பின்னர், இளைஞர்களிடம் விசாரணை நடத்திய போது, பொரளை பகுதியில் உள்ள தரகர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிக ளுக்கு தெரியவந்தது.

இதன்படி, குடிவரவு – குடிய கல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இருவரை யும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டு நாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share This Article