அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பை ஜனவரியில் மேற்கொள்ள பரிந்துரை!

editor 2

அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பில் 5,000 ரூபாவினை எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபாவினையும் பெற்றுக்கொடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share This Article