நினைவேந்தல்களுக்கு தடை கோரும் மனுக்களை நிராகரித்தது கிளிநொச்சி நீதிமன்று!

editor 2

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த காரணிகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதவான், அந்த மனுக்களை நிராகரித்துள்ளார்.

Share This Article