நினைவேந்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை!

editor 2

எதிர்வரும் நாட்களில் வடக்கு – கிழக்கில் மாவீரர் தினத்தை சட்டவிரோதமாக அனுஷ்டிப்பவர்கள் தொடர்பில் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணை பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள சட்ட விரோத மாவீரர் நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் போது பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

Share This Article