ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் உரையாற்றிய போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டமையடுத்து சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொருளாதார நெருக்கடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அதில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் பெயர்களை உச்சரித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை சுற்றிவளைத்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் கைகளிலிருந்த ஆவணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அவரை பேச விடாது ஒலிவாங்கியை பறித்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.
இதையடுத்து நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.