மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2023 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 58 மாணவர்களில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு இப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கு 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய லி.பவக் ஷனா (177), சு.வேதுரிஜா (175), வி.துஷானா (173), வி.யக் ஷனா (169), ல.யுவக் ஷனா (169), சு.சுகேஸ் (162), சி.கேஷித் (154), தி.கியூமிகா (153) , நி. டிவிக் ஷா (150), ற.பவிஷ்னா (149) , ர. அபியேல் (148), இ.அபிலஷா (147) போன்ற மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இது குறித்து பரீட்சையில் சாதித்த மாணவிகளின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில்,
இப்பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளதுடன் இம்முறை பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. சி.சிறீதரன் முயற்சியால் E கல்வியின் அனுசரனையுடன் நடாத்தப்பட்ட விசேட Zoom வகுப்புகளும், மேலும் அதிபர் பூ.கமலதாசன் அவர்களது வழிகாட்டுதல் மற்றும் ஆலாசனைகளின் கீழ் திருமதி.சிவமலர் சௌந்தரராஜா , திருமதி. ரம்யா விஜயரூபன் ஆகிய ஆசிரியைகளின் அயராத தொடர் கல்வி நடவடிக்கைகளின் காரணமாகவும் இப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர் குழாமின் பேராதரவுடன் இந்த வெற்றியை எமது பிள்ளைகள் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தனர்