2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார். வரவு செலவுத்திட்டத்தின் சாராம்சம் வருமாறு,
* அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுத் தொகை 7,800 ரூபாவிலிருந்து 17,800 ரூபாவாக அதிகரிப்பு – நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும்.
* ஓய்வூதியச் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு
* பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு
* அரச பணியாளர்களுக்கு முன்னரைப்போன்று இடர்கால கடன் மீண்டும் வழங்கப்படும்.
* அஸ்வெசும நிவாரணத்திற்காக மும்மடங்கில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் .சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும்.அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும் , முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.
* கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு
* நிவாரணக்கடன்களுக்காக விசேட ஏற்பாடுகள் .சிறு நடுத்தர வர்க்க கைத்தொழில்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகளின் காணி பிரச்சினையை தீர்க்க விசேட கொள்கை.அரச காணிகளை பயன்படுத்த தீர்மானம்
* அரச தொடர்மாடிகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் உரித்தாகும்.அவர்களிடம் இனி வாடகை அறவிடப்படமாட்டாது.
*பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கீடு
விரிவான தரவுகளை எதிர்வரும் செய்திகளில் எதிர்பாருங்கள்.