வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகக் கூடும் என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘வடகிழக்குப் பருவ மழை காலத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுகள்
உருவாகி மழை பெய்வது வழமையானது.
ஏற்கனவே கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றுச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்தது.
இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் அந்தமான் மற்றும் இலங்கைக்கு
இடையே தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றுச்சுழற்சி உருவாகியுள்ளது.’ –
என்றுள்ளது.