இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து
இலங்கைக்கு நாடு கடத்தியது.
பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத் தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 ஆவது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது.
‘நாம் 200 ஒற்றுமை பன்முகத் தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில்
மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.
இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர்
ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்
வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள
அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
கலந்து கொண்டார்.
இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை
அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத்
தமிழர்களின் நாம் 200 விழா விற்கு வாழ்த்துரை வழங்கி
அனுப்பியிருந்தார்.
முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால்
நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்
சர் மு.க.ஸ்டாலினின் காணொலிஉரையை ஒளிபரப்பக்கூடாது என்று மத்திய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இந்து ஆங்கில நாளேடு விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட
அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து
கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை
விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது-எனத்
தெரிவித்துள்ளார்.