2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசின் தரப்பு வட்டாரங்களில் அறியமுடிகிறது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 இலட்சம் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள். வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் வரி அல்லது அரச சொத்துக்களை விற்று சம்பாதிக்க வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.
15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க, வருடத்திற்கு 180 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.