மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், நேற்று மாலைக்குள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யமுடியாததால் மாணவர்கள் இன்று காலை வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக் கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, யாழ் பல்லைக்கழக மாணவர்கள் 5 பேரும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, மாணவர்களை பிணையில் விடுவித்து உத்தரவிடப்பட்டது.
பிணையாளிகளின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராமசேவகரின் ஆவணத்தை நேற்று மாலை 6 மணிக்குள் பெற்றுக்கொள்ள முடியாதததையடுத்து,
மாணவர்கள் மட்டக்களப்பு சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவர்கள் முறைப்படி விடுவிக்கப்படுவர்.