இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில்,
நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி நீண்டகாலமாக காணப்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுப்புக்களைச் செய்து வருகின்றது.
அந்த வகையில் தான் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்ஊடாக இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டவருதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதும் இலக்காக உள்ளது.
அந்த வகையில் குறித்த ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளின் தற்போது அதற்கான வரைவு தயாரிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரைவினை இறுதிசெய்து இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.