யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாவடி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைக் கொண்ட 28 வயதுடைய சர்வானந்தா கிருஷாந் என்பவரின் சடலமே கரையொதுங்கியுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.